
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரி அருகாமையில் ஸ்டென் மோர் சந்திப்பு பஸ் நிலையம் நகராட்சி கட்டிட கழிப்பறையில் தண்ணீர் வராமல் இருக்கிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்பு அப்பகுதியில் பிளாஸ்டிக் இரும்பு பொருட்களை போடுவதினால் பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லை. இதனால் பலமுறை நகராட்சி ஆய்வாளர் மற்றும் அதிகாரிகளிடம் புகார்கள் கொடுத்தும் இதுவரை கண்டு கொள்வதில்லை. இது போல் வால்பாறை அரசு பழைய பேருந்து நிலையம் அருகாமையில் நகராட்சி கட்டிட கழிப்பறை மறைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருமா வராதா என கேள்விக்குறியாகவும் உள்ளது.
இதனைக் கண்டு உடனே நகராட்சி ஆய்வாளர் மற்றும் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை செய்தியாளர்
-திவ்யக்குமார்.












