பாஞ்சாலங்குறிச்சி அரசு விழா நடைபெற வேண்டும்!!

பல ஆண்டுகளாக பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி விழா சிறப்பாக நடைபெறுகிறது. ஆனால் அரசு விழாவான கட்டபொம்மன் விழாவோ நடத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

எப்போதுமே அரசு விழாதான் பொதுமக்கள் விழா. கட்டபொம்மனுக்காக அரசுத் தரப்பில் கொண்டாடப்படும் விழாவே கட்டபொம்மனுக்கான மரியாதையையும் புகழையும் காக்கின்ற செயலாகும்.

இந்த ஆண்டு மாவட்ட ஆட்சித் தலைவரையும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரையும் வைத்து விழாவை நடத்தி விட்டு அடுத்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு விஜய் அவர்களை அழைத்து விழா நடத்தலாம் என்பது எங்கள் அறக்கட்டளையின் கருத்தாகும்.

தென் மாவட்டங்களில் கட்டபொம்மன் பெயரில் பல்வேறு அமைப்புகள் இயங்குகிறது. குறிப்பாக “கட்டபொம்மன் வாரிசுதாரர்கள் அறக்கட்டளை” இயங்குகிறது. கட்டபொம்மன் விழாவை நடத்துவதற்கு இவர்களுக்கே முதல் முன்னுரிமை இருக்கிறது.

பல்வேறு அமைப்புகள் இருந்தும் கட்டபொம்மன் அரசு விழாவை நடத்தாமல் நமது சமுதாயம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறது.

ஆகவே யாரும் எந்த அமைப்பும் அரசு விழாவை நடத்த முன்வரவில்லை என்றால் “கட்டபொம்மன் குளோபல் பவுண்டேஷன்” அரசு விழாவை நடத்த தயாராக இருக்கிறது என்பதை எங்கள் அமைப்பு தெரிவித்துக் கொள்கிறது. இதற்குண்டான செலவுகளையும் எங்கள் அமைப்பே முழுமையாக ஏற்றுக் கொள்ளும் என்று உறுதி கூறுகிறோம்.

வேறு அமைப்புகள் முன்னின்று விழாவை நடத்தினாலும் அவர்களை பாராட்டவும் அவர்களுக்கு தேவையான உதவியையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

எங்கள் அமைப்பை பொறுத்த அளவில் அரசு விழா ஒவ்வொரு ஆண்டும் நல்லபடியாக நடைபெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

நன்றி

நிர்வாகிகள்
கட்டபொம்மன் குளோபல் பவுண்டேஷன்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts