பொள்ளாச்சி – மின்கரை சாலையில் கனிம வள கொள்ளை விதிகளை மீறி கேரளாவுக்கு செல்லும் டாரஸ் லாரிகளால் விபத்து அபாயம் !!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மின்கரை சாலை வழியாக தமிழகத்தின் கனிம வளங்கள் நாள்தோறும் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பாக ராட்சத டாரஸ் லாரிகளில் அளவுக்கு அதிகமான எடையுடன் கனிமங்கள் கொண்டு செல்லப்படுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

​இந்தச் சாலை வழியாகச் செல்லும் டாரஸ் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் எடையுடன் (Overload) கருங்கற்களை ஏற்றிச் செல்கின்றன வாகனத்தின் பாடி மட்டத்திற்கு மேலாக கற்களை அடுக்கிக்கொண்டு எவ்விதப் பாதுகாப்பும் இன்றி அதிவேகமாகச் செல்வதால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் பெரும் பீதிக்குள்ளாகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ​முக்கியமாக சாலையில் உள்ள வேகத்தடைகளில் (Speed Breakers) லாரிகள் ஏறி இறங்கும்போது மேலே அடுக்கப்பட்டுள்ள கற்கள் தவறி கீழே விழும் அபாயம் நிலவுகிறது. இது இருசக்கர வாகன ஓட்டிகளின் உயிருக்கு நேரடி அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

​இந்த கனிம வள கடத்தல் குறித்து சமூக ஆர்வலர்கள் எழுப்பும் முக்கியக் கேள்வி இதுதான்
​வளந்தாயமரம் பகுதியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை (RTO) கடந்தும் தமிழக – கேரள எல்லைப் பகுதியில் உள்ள ரயில்வே கேட் காவல் துறை சோதனைச் சாவடியை கடந்தும் இந்த வாகனங்கள் எப்படி தடையின்றிச் செல்கின்றன?

​அரசு அலுவலகங்களும் காவல் துறை சோதனைச் சாவடிகளும் செயல்பாட்டில் இருக்கும்போதே கண்முன்னே இவ்வளவு பெரிய விதிமீறல்கள் நடப்பது அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் காட்டுவதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

​உயிரிழப்புகள் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் இணைந்து பொள்ளாச்சி – மின்கரை சாலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் விதிமீறி கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக துணை தலைமை நிருபர்
உங்கள்
– 𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ் குமார்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts