வால்பாறை காவல் நிலையத்தில் நூலகம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை காவல் நிலையத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள நூலகம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுவாக காவல் நிலையத்திற்குத் தங்கள் குறைகளைத் தெரிவிக்க வரும் பொதுமக்கள் உயர் அதிகாரிகள் மற்ற பணிகளில் இருக்கும்போது காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது அந்த நேரத்தை வீணடிக்காமல் பயனுள்ள வகையில் செலவிடும் விதமாக இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது குறித்து நமது நாளைய வரலாறு இதழ் சார்பில் நேரடியாக ஆய்வு செய்தபோது ஆச்சரியமூட்டும் தகவல்கள் கிடைத்தன காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் அல்லது இதர அதிகாரிகள் அலுவலகத்தில் இல்லாத நேரங்களில் அங்கு வரும் பொதுமக்கள் நூலகத்தில் உள்ள வாழ்வாதார மேம்பாடு குறித்த புத்தகங்களையும் பொது அறிவு நூல்களையும் ஆர்வத்துடன் வாசிக்கின்றனர். தவறு செய்து திருந்த நினைப்பவர்களுக்கும் வழிகாட்டுதல் தேவைப்படுபவர்களுக்கும் இங்குள்ள புத்தகங்கள் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளன.

வால்பாறை காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களின் இந்த முன்னோடி முயற்சி மற்ற காவல் நிலையங்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது. நாளைய வரலாறு பத்திரிகை மற்றும் பொதுமக்கள் சார்பாகத் தமிழகக் காவல்துறைத் தலைவருக்கு (DGP) நாம் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால் வால்பாறை காவல் நிலையத்தைப் பின்பற்றி தமிழகத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் இது போன்ற நூலகங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் நேரத்தை வீணாக்காமல் அங்குள்ள புத்தகங்களைப் படித்துப் பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

-P.பரமசிவம் வால்பாறை

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts