வால்பாறை சேகரட் ஹார்ட் பள்ளி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி மாணவர்கள் சாதனை!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அமைந்துள்ள சேகரட் ஹார்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இப்பள்ளியில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 56 மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்வு எழுதிய 56 மாணவர்களும் முழுமையாக தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாணவர்கள் விகாஸ் – 492 மதிப்பெண்கள் பள்ளி அளவில் முதலிடம், தாரணி – 487 மதிப்பெண்கள் இரண்டாமிடம், சீதா – 482 மதிப்பெண்கள் மூன்றாமிடம்.

இந்த அசத்தலான தேர்வு முடிவுகளின் மூலம் சேகரட் ஹார்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி வால்பாறை தாலுகா அளவிலேயே முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்குப் பள்ளியின் ஆசிரியர்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

வால்பாறை
-பேபி திவ்யகுமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts