
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கும் மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வால்பாறை நகர தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் வால்பாறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தோழர் பரமசிவம் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது மார்க்சிஸ்ட் செயலாளர் பரமசிவம் அவர்கள் தவெக நிர்வாகிகளிடம் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.
அப்பாவி மற்றும் சாமானிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை எவ்வித பாதிப்புமின்றிப் பாதுகாக்க வேண்டும். வால்பாறைப் பகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
பிழைப்பு தேடி வெளியூர்களுக்கு சென்ற மக்களை மீண்டும் வால்பாறைக்கு வரவழைக்க வேண்டும். அவர்களுக்கு மாற்றுத் தொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தந்து எஸ்டேட் பகுதிகளில் அவர்கள் மீண்டும் குடியமர்வதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த ஆலோசனைகளை ஏற்றுக் கொண்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் நிச்சயமாக இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வால்பாறை மக்களின் முன்னேற்றத்திற்காக நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று உறுதி அளித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக துணை தலைமை நிருபர் உங்கள்
-𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.












