விசில் சத்தம் தேர்தல் யுத்தம் வேட்பாளர் முகம் தெரியாது விஜய் பெயர் மட்டுமே போதும்

தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய அலை வீசத் தொடங்கியிருக்கிறது. நடந்து முடிந்த இந்தத் தேர்தலில் பல தொகுதிகளில் வேட்பாளர்கள் யார் அவர்களின் பின்னணி என்ன என்பது கூடத் தெரியாத சராசரி வாக்காளர்கள் கூட ஒரு குறிப்பிட்ட சின்னத்தைத் தேடிச் சென்று வாக்களித்துள்ளனர். அந்த ஈர்ப்பு விசைக்குச் சொந்தக்காரர் விசில் விஜய்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஒரு அரசியல் கட்சிக்குக் கொள்கைகள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அந்தச் சின்னம் சாமானிய மக்களைச் சென்றடைவது. விஜய்யைப் பொறுத்தவரை விசில் என்பது வெறும் தேர்தல் சின்னமாக மட்டும் அமையவில்லை அது ஒரு கொண்டாட்டத்தின் அடையாளமாக மாறியுள்ளது.

கிராமப்புறங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை வேட்பாளரின் பெயர் தெரியாவிட்டாலும் விஜய் கட்சிக்குத் தான் ஓட்டு என்று முடிவெடுத்த வாக்காளர்களுக்கு விசில் சின்னம் ஒரு எளிமையான வழிகாட்டியாக அமைந்தது.

சினிமா பாடல்கள் மூலம் மக்களிடையே ஏற்கனவே ஊடுருவியிருந்த அந்த விசில் சத்தம் தேர்தல் களத்தில் வாக்குகளாக மாறியிருப்பது அரசியல் ஆய்வாளர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

வேட்பாளரைப் பார்க்காமல் சின்னத்தைப் பார்த்து வாக்களிப்பது என்பது அந்த இயக்கத்தின் தலைவன் மீது மக்கள் வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையைக் காட்டுகிறது. விஜய் பார்த்துக் கொள்வார் அல்லது விஜய்க்காக ஒரு வாய்ப்பு என்ற எண்ணம் தொகுதி வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கைத் தாண்டி விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு கசப்பான உண்மையை மற்ற கட்சிகளுக்கு உணர்த்தியுள்ளது மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றத்திற்கான முகமாக விஜய் உருவெடுத்துள்ளார். பெயரோ முகமோ தெரியாத வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கிறார்கள் என்றால் அங்கு போட்டியிடுவது தனிநபர்கள் அல்ல விஜய்யின் பிம்பமும் மக்களின் எதிர்பார்ப்பும் தான்.

தமிழக அரசியலில் விசில் சத்தம் இப்போது உரக்கக் கேட்கத் தொடங்கியுள்ளது. இது வெறும் தேர்தல் வெற்றி மட்டுமல்ல மக்களின் மனங்களில் விசில் விஜய் ஆழமாகப் பதிந்துவிட்டதற்கான சாட்சி வேட்பாளர்களைத் தாண்டியும் ஒரு தலைவனால் வாக்காளர்களை ஈர்க்க முடியும் என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது விஜய்யின் தனிநபர் செல்வாக்கிற்கு கிடைத்த மகுடம் அதே சமயம் தமிழக அரசியலில் வேட்பாளரின் தகுதியை விட கட்சியின் சின்னமே முக்கியம் என்ற பழைய பிம்பம் இன்னும் உடையவில்லை என்பதற்கான சாட்சியும் கூட என்ற சிந்தனையோடு

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக துணை தலைமை செய்தியாளர் உங்கள்
-𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts