
கோவை மாவட்டம் சூலூர் அருகே நேற்று மாலை வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுமி திடீரென மாயமானார். பெற்றோர் புகாரின் பேரில் சிறுமியைத் தேட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் இன்று அப்பகுதியில் உள்ள குளக்கரையில் சிறுமி சடலமாகக் கிடந்ததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சிறுமியைக் கடத்திச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தற்போது அப்பகுதி சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து தலைமறைவாக உள்ள இரு மர்ம நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது மேலும் உறவினர்களும் பொதுமக்களும் நீதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சமூகத்தில் இத்தகைய கொடூரமான குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு சட்டம் மிகக் கடுமையான மற்றும் சமரசமற்ற தண்டனைகளை வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. பிஞ்சு என்றும் பாராமல் நடத்தப்படும் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு சட்டம் வழங்கும் மிக உயர்ந்த தண்டனைகளே தகுதியானவை என்ற சிந்தனையோடு
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
𝗦𝗧𝗔𝗥 𝗠. சுரேஷ்குமார்.












