விலைவாசி மற்றும் வரி சுமையை குறைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போராட்டம்!!

விலைவாசி மற்றும் வரி சுமையை குறைக்க மத்திய அரசும் மாநில அரசும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி
போராட்டம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அமெரிக்கா – ஈரான் மோதலால் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பதைத் தடுக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் வரியைக் குறைக்க வேண்டும்.

கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் புதிய ‘விபிஜி ராம்ஜி’ திட்டத்தைக் கைவிட்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசின் நான்கு புதிய தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களுக்கான விதிகளை உருவாக்கும்போது, தமிழக அரசு தொழிற்சங்கங்களை அழைத்து ஆலோசிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஜோதி தலைமை தாங்கினார். போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.புவிராஜ் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தாலுகா குழு உறுப்பினர்கள் மலைக்கனி, ஜெயவேல் முருகன், கிளை செயலாளர் அழகர்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts