
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 14 க்கும் மேற்பட்ட சமுதாயங்கள் இணைந்து பல நூற்றாண்டு காலமாக இணைந்து சமுதாய பாகுபாடின்றி வடக்குவாசெல்வி அம்மன் மற்றும் செல்வவிநாயகர், அடைக்கலம் காத்த அய்யனார் திருக்கோவில் கோவில் கொடை விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வடக்குவாசெல்வி அம்மன் கோவிலில் இருந்து மஞ்சள் நீர் குடம் எடுத்து ஊர் கண்மாய்க்கு சென்று பக்தர்களுக்கு அருள் ஏற்றி, அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து வடக்குவா செல்வி அம்மன் கோவில் முதல் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் வரை சென்று கோவில் கொடை சிறப்பாக தொடங்கியது.
இந்த நிகழ்வில் சிங்கிலிபட்டி கிராம தர்மகத்தா முத்துக்கண்ணன், கல்குமி கிராம தர்மகத்தா கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்ககள் ஆவுடையப்பன்,
சீத்தாராமன், செல்லக்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.












