பரிசுப் பொருட்களுக்குப் பதிலாக எழுதுபொருட்கள் அமைச்சர் விக்னேஷ்.க-வின் நெகிழ்ச்சியான வேண்டுகோளுக்குப் பொதுமக்கள் வரவேற்பு!!

பொது நிகழ்ச்சிகளிலும் சந்திப்புகளிலும் தனக்கு மாலை சால்வை பூங்கொத்து மற்றும் ஆடம்பரப் பரிசுப் பொருட்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ்.க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

​அதற்குப் பதிலாக நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களை வழங்குமாறு அவர் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வாறு பெறப்படும் பொருட்கள் அனைத்தும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி உதவிக்காக நேரடியாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

​சில நிமிடங்களில் வீணாகும் சால்வைகளுக்குப் பதிலாக ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் அமைச்சர் எடுத்துள்ள இந்த எளிய முன்மாதிரியான முயற்சி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் வழங்கும் ஒவ்வொரு பேனாவும், நோட்டுப் புத்தகமும் ஒரு அரசுப் பள்ளி மாணவனின் எதிர்காலத்தை ஒளிரச் செய்யும் என்பதால் இந்த நன்முயற்சியில் அனைவரும் கைகோர்ப்போம் என்ற சிந்தனையோடு உங்கள் செய்தியாளர்

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-𝗦𝗧𝗔𝗥 𝗠. சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts