பம்பரமாய் சுழலும் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கார்த்திக்கு பொதுமக்கள் பாராட்டு!!

ஸ்ரீவில்லிபுத்தூர்,ஜூன்.30:தங்கள் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்து, ஓய்வின்றி களத்தில் பணியாற்றும் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கார்த்திக்கை பொதுமக்கள் பம்பரமாய் சுழலும் எம்.எல்.ஏ என பாராட்டி வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தினமும் தனது சட்டமன்ற அலுவலக கட்டிடத்திற்கு வருகை தந்து மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்வு கண்டு வருகிறார்.

அலுவலகத்திலே முடங்கிக் கிடக்காமல், தினமும் தொகுதி முழுவதும் நேரடியாகச் சென்று வளர்ச்சிப் பணிகளை பார்வையிடுகிறார்.

குடிநீர், சாலை, மின்சாரம் போன்ற அத்தியாவசியப் பிரச்சனைகளுக்கு அதிகாரிகளை ஒருங்கிணைத்து உடனடியாகத் தீர்வு காண்கிறார்.

பொதுமக்கள் தன்னை எளிதாக அணுகும் வகையில் இருப்பதோடு,அதிகார திமிரின்றி,கட்சிப் பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் பொதுவானவராகச் செயல்படுவதோடு மட்டுமல்லாமல. மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் சரி செய்தும் வருகிறார்..

தொகுதி மக்களின் அன்றாடப் பிரச்சனைகளான சான்றிதழ்கள்,முதியோர் உதவித் தொகை , தொடர்பான குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்து வருகிறார்.

அரசு பள்ளிகளை பார்வையிட்டு அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் குடிநீர் சுகாதாரமாக வழங்கப்படுகிறதா என்பதை நேரிடையாக ஆய்வு செய்கிறார்.பள்ளிகளில் கழிவறை வசதி உள்ளதா ? கழிவறைகள் முறையாக பராமரிக்கபட்டு உள்ளதா ? என்பதை தானே நேரில் ஆய்வு செய்கிறார்.பின்னர் அங்குள்ள பள்ளி மாணவர்களிடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடுகிறார்.மாணவர்களிடம் தன்னம்பிக்கை ஊட்டும் விதமான பல சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறினை எடுத்துக் கூறி அவ்வாறு மாணவர்கள் திகழ வேண்டும் அறிவுரை வழங்குகிறார்.

அரசு மருத்துவமனைகளில் நேரில் ஆய்வு செய்யும் போது மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிகிறார். நோயாளிகளுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும் என மருத்துவனை பணியாளர்களிடம்அறிவுறுத்துகிறார்.

வசதி படைத்தவர்களும் அரசு மருத்துவமனைகளை நாடும் நிலையை உருவாக்குவேன். மருத்துவமனைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தான் தயாராக இருக்கிறேன் என்பன போன்ற நம்பிக்கையான வார்த்தைகளை அங்குள்ளவர்களிடம் தெரிவிக்கிறார்.

குறிப்பாக மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று பள்ளி வருவதற்கும் வீடு திரும்புவதற்கும் வசதியாக இருக்கும் படி உரிய நேரத்தில் உரிய வழித்தடத்தில் அரசுப் பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகளை தொடர்பு கொண்டு தீர்வுகண்டு வருகிறார்.பல ஆண்டுகளாக பேருந்து வசதியே இல்லாமல் இருந்த ஊர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து கொடுத்து தீர்வு கண்டு வருகிறார்.

இவ்வாறு தனது தன்னலமற்ற பொது சேவையால் அரசு அதிகாரிகள்,சமூக சேவகர்கள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்களால் பம்பரமாய் சுழலும் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கார்த்திக் என அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts