ஸ்ரீ சந்திமரிச்சம்மன் கோயிலின் ஆடி மாத கொடை விழா மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள துலுக்கன்குளம் கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சந்திமரிச்சம்மன் கோயிலின் ஆடி மாத கொடை விழா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் சார்பில் மாபெரும் , ஆறாம் ஆண்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பூஞ்சிட்டு, தேன்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 40 ஜோடி மாடுகள் கலந்து கொண்டு இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன.

விளாத்திகுளம்-சூரங்குடி சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சடையாண்டி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் நாராயணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பூஞ்சிட்டு பிரிவுக்கு போக-வர 6 மைலும், தேன்சிட்டு பிரிவுக்கு போக-வர 4 மைலும் இலக்குத் தூரமாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. போட்டியைக் காண சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

இறுதியாக, போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பில் பரிசுத்தொகை மற்றும் சுழற்கோப்பை வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts