கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் மகிழ் முற்றம் பதவியேற்பு விழா! – மகிழ் முற்றம் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மகிழ் முற்றம் சார்பில் பதவியேற்பு மற்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார்.கணிதபட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் புதிதாக குறிஞ்சி குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஆசிரியை மணிமேகலை, முல்லை குழுவிற்கு ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர் ரகமதுல்லா, மருதம் குழுவிற்கு ஒருங்கிணைப்பாளராக ஆசிரியை நிவின், நெய்தல் குழுவிற்கு ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர் வெள்ளைச்சாமி, பாலை குழுவிற்கு ஒருங்கிணைப்பாளராக ஜெம்ம ராகினி சகாய ஹில்டா உள்ளிட்ட ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாணவத் தலைவராக மகிழ்முற்றம் குழுவில் குறிஞ்சி குழுவிற்கு மாணவ தலைவராக ரிதன்யாவும், துணைத்தலைவராக மாணவர் கிஷோர், முல்லை குழுவிற்கு மாணவி தவஸ்ரீ துணைத் தலைவராக மாணவன் ஹரிஹரன், மருதம் குழுவிற்கு மாணவ தலைவராக ஹர்ஷினி, துணைத் தலைவராகமாணவர் ரோகித், நெய்தல் குழுவிற்கு மாணவன் முகேஷ் துணைத் தலைவராக மாணவி கஜோலும், பாலை நிலத்திற்கு மாணவி சுபிக்ஷா தலைவராகவும், துணைத் தலைவராக மாணவர் கார்த்தி உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து குழு தலைவர்களும் மகிழ் முற்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் மகிழ்முற்ற ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா பேசும்பொழுது;

அரசுப் பள்ளி மாணவர்களிடையே தலைமைப் பண்பு, குழுவாகச் செயல்படுதல் மற்றும் சமூக உணர்வை வளர்க்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட திட்டமே மகிழ் முற்றம் ஆகும்.

மகிழ் முற்றம் திட்டத்தின் கீழ், மாணவர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என 5 குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றனர். மாதந்தோறும் சிறப்பாகச் செயல்படும் குழு ‘மாதத்தின் வெற்றி குழு’ என எமிஸ் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டு, அந்தக் குழுவின் கொடி பள்ளி வளாகத்தில் பெருமையுடன இயற்றப்படும்.

தலைமைப் பண்பு:
மாணவர்களை பல்வேறு செயல்பாடுகளுக்குத் தயார்படுத்தி, பொறுப்புணர்வை உருவாக்குகிறது.

ஒற்றுமை மற்றும் குழுப்பணி:

சக மாணவர்களுடன் இணைந்து செயல்படவும், சமூக மனப்பான்மையை வளர்க்கவும் உதவுகிறது.

நற்பண்புகள்:
நேரம் தவறாமை, வகுப்பறை பங்கேற்பு, தன் சுத்தம் பேணுதல் போன்ற செயல்களுக்கு ஊக்கமளிக்கிறது என்று பேசினார். நிறைவாக ஆசிரியை செல்வி ஜாய் நன்றி கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts