ஜாதி சான்றிதழ் வழங்காமல் கேரள அரசு இழுத்தடிப்பு!!

இடுக்கி மாவட்டத்தின் தேயிலைத் தோட்டப் பகுதிகளில் சாதிச் சான்றிதழ்கள் பெறுவதில் ஏற்படும் காலதாமதம் தோட்டத் தொழிலாளர்களைப் பெரிதும் பாதித்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தலமான மூணார் பகுதியில் அதிகமான தமிழர்கள் வசித்து வாழ்ந்து வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்தியா முழுவதும் வரும் தலைமுறையினர்கள் கல்வி அறிவை பெற்று முன்னேற்ற பாதையில் அடைய வேண்டும் என்பதே நோக்கமாகக் கொண்டது. ஆனால் மூணார் சுற்றுவட்டார பகுதியில் இன்னும் மக்கள் அந்த கல்வியை பெற்றுக் கொள்வது எட்டாக்கனியாகவே உள்ளது.
காரணம் அங்கு பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு ஜாதி சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது ஆனால் அவர்களின் ஜாதி சான்றிதழ் பெறுவதற்கு பல சிக்கல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கேரளா அரசானுக்கு மூணாரில் வசிக்கும் மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டுமெனில் அவர்கள் முன்னோர்கள் இங்கு இருந்ததற்கான ஆதாரமாக சான்றிதழ் வேண்டுமென கேட்டுக் கொள்கின்றன ஆனால் அங்கு வசிக்கும் பல மக்களின் முன்னோர்கள் சான்றிதழ் இந்திய தங்களுடைய வாழ்க்கையை நடத்தியுள்ளனர் இப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி தங்கள் முன்னோர்களின் சான்றுகளை சாதாரண மக்கள் சமர்ப்பிக்க முடியும் இதனால் வில்லேஜ் ஆபீஸ் மற்றும் தாலுகா ஆபிசுக்கு ஜனங்கள் விண்ணப்பத்தோடு நீண்ட நாட்களாக அங்கும் இங்குமாக மாறி மாறி இழுத்து அடிக்கப்பட்டு அவர்களுடைய சான்றிதழ் விண்ணப்பம் கோரிக்கையானது நிராகரிக்கப்படுகிறது.

புதிய தலைமுறை 21ம் நூற்றாண்டில் கூட இவ்வகையான பிரச்சனை நீண்டு கொண்டு தான் உள்ளது.
இதனால் உடல் ரீதியாக பொருளாதார ரீதியாகவும் மனரீதியாகவும் மக்கள் துயரத்துக்கு ஆழ்ந்து அவதிப்படுகின்றனர். கேரளா அரசு உடனடியாக இதில் தலையிட்டு சரியான சான்றிதழை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஜான்சன் மூணாறு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts