
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அறிவியல் மன்றத்தின் சார்பில் தேசிய விண்வெளி தினம் (ஆக 24) கடைபிடிக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார்.
தேசிய விண்வெளி தினம் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கந்தர்வகோட்டை ஒன்றிய தலைவரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமத்துல்லா பேசும்போது
இந்தியா தனது 3வது தேசிய விண்வெளி தினத்தை ஆகஸ்ட் 23, 2026 அன்று கொண்டாடியது. சந்திரயான்-3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியதன் நினைவாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான (2026) கருப்பொருள் விக்சித் பாரத் நோக்கி: புதுமைப்படுத்துதல், ஒத்துழைத்தல் மற்றும் உலகளாவிய விண்வெளித் தலைமை என்பதாகும்.
அறிவியல் விழிப்புணர்வு:
மாணவர்களிடையேயும் இளைஞர்களிடையேயும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த துறைகளில் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கத்தோடு இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
உலக அரங்கில் விண்வெளித் துறையில் இந்தியா அடைந்துள்ள அபரிமிதமான வளர்ச்சியையும், தற்சார்பு நிலையையும் உலகிற்குப் பறைசாற்றும்நாளாக இந்த தேசிய விண்வெளி தினம்’ அமைந்துள்ளது என்று பேசினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக தலைமை நிருபர்
-ஈசா.









