
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக மக்கள் கூட்டமைப்பின் சார்பாக விஸ்வகர்மா ஐந்து தொழிலாளர்கள் பூணூல் மற்றும் ஆவணி அவிட்டம் விழா சிறப்பாக நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விழாவில் ஜெகத்குரு ஸ்ரீ பாபுஜி சுவாமிகள் தலைமையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூணூல் அணிந்து கொண்டு சென்றனர் பல்வேறு விஸ்வகர்மா கம்மாளர் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முதல் முறையாக பூணூல் அணிந்து ஜகத்குருவிடம் ஆசி பெற்றனர் பூணூல் என்பது பஞ்சபூதங்களில் சக்தியை கொண்டது. பரப்பிரம்மாவாக இருக்கின்ற விஸ்வ பிரம்மாவால் படைக்கப்பட்டது மேலும் பூணூல் அணிவதால் செல்வம் ஐஸ்வர்யம் மற்றும் ஆயுள் பலம் அதிகரிக்கும் என்று ஜகத்குரு ஸ்ரீ பாபுஜி சுவாமிகள் தெரிவித்தார்.
இந்த நல்லதொரு நிகழ்வில் ‘ ரிக் ரவி வரதராஜன்,மலுமிச்சம்பட்டி செல்வராஜ், ஒத்தக்கால் மண்டபம் நடராஜன், மயிலேறி பாளையம் பரமசிவம், செட்டிபாளையம் கனகராஜ் மோகன் குமார், மோகன்ராஜ், குழந்தைவேலு மற்றும் பல்வேறு பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பூஜை நிகழ்வுகளை டாக்டர் கணேஷ்குமார் ஆச்சாரி செய்திருந்தார். மேலும் அனைவருக்கும் விஸ்வகர்மா அமைப்பின் சார்பாக பூணூல் மற்றும் சிற்றுண்டி தரப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.









