
கோவை மோலப்பாளையத்தில் உள்ள தி ஈக்வெஸ்ட்ரியன் கிரெஸ்ட் நடைபெறும், ஈக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா ஃபெடரேஷன் சார்பில் சார்பில் நடைபெறும் இரண்டாவது தேசிய அளவிலான இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் குதிரை தடை தாண்டும் போட்டியின் முதல் நாள் நிகழ்வுகள் சனிக்கிழமை உற்சாகமாக நடைபெற்றன. சுமார் 6,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டு போட்டிகளை கண்டு ரசித்தனர்.
இன்றைய போட்டியை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாண்புமிகு அமைச்சர் வி. சம்பத்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டியினை கண்டுகளித்தார்.
முதல் நாள் குதிரையேற்ற லீக் போட்டியில், சென்னை புல்ஸ், பெகாசஸ் ஸ்போர்ட்ஸ் , பெங்களூரு நைட்ஸ் , கோல்கொண்டா சார்ஜர்ஸ் , குவாண்டம் ரெய்ன்ஸ், எலைட் ஈக்வெஸ்ட்ரியன்ஸ் என 6 அணிகள் பங்கேற்றுள்ளன.

முதல் நாள் போட்டியில் 6 அணிகளைச் சேர்ந்த குதிரையேற்ற வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். போட்டியாளர்கள் மொத்தம் 11 தடைகளை தாண்ட வேண்டும். முதல் 7 தடைகளில் வீரரும் குதிரையும் தங்களது வசதிக்கேற்ப தடைகளை தாண்டலாம். 8 முதல் 11-வது தடைகள் அதிக வேகம் மற்றும் நேரத்தை மையமாகக் கொண்டதாக அமைந்தன. மற்ற வீரர்கள் பதிவு செய்த சிறந்த நேரத்தை முறியடிக்கும் வகையில் வீரர்கள் வேகமாக செயல்பட வேண்டியிருந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஒருசில வீரர்கள் முழுப் போட்டிப் பாதையையும் எந்தத் தவறும் இல்லாமல் கடப்பதில் சிரமங்களை எதிர்கொண்டனர். சில குதிரைகள் குறிப்பிட்ட தடைகளைத் தாண்ட தயக்கம் காட்டினாலும், வீரர்கள் தொடர்ந்து முயற்சி செய்து சிறப்பான ஆட்டத்தை வழங்கினர். குதிரையேற்ற போட்டியை காண வந்த பார்வையாளர்களும் போட்டியின் வேகம் மற்றும் சாகசத்தால் ஈர்க்கப்பட்டனர். குதிரைகள் தடைகளைத் தாண்டிய ஒவ்வொரு தருணத்திலும் பார்வையாளர்கள் உற்சாகமாக குரல் எழுப்பி போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.
-சீனி,போத்தனுர்.














