விளாத்திகுளம் அருகே நள்ளிரவில் ஆற்று மணல் அள்ளியதாக பரபரப்பு புகார்!!

விளாத்திகுளம், ஆகஸ்ட் 30.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமப் பகுதியில் வைப்பார் ஆற்றுப்படுகையை ஒட்டியுள்ள பகுதியில், இரவு நேரங்களில் அரசு அதிகாரிகளின் துணையுடன் சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர் எபனேசர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேட்டுப்பட்டி கிராமத்தில் வைப்பார் ஆற்றுப்படுகைக்கு அருகே சுமார் 5 ஏக்கர் பரப்பளவில், சுமார் 50 அடி ஆழம் வரை மணல் அள்ளப்பட்டுள்ளதாகவும், கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் ஜே.சி.பி. இயந்திரங்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட டிராக்டர் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு மணல் எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் நள்ளிரவு நேரங்களில், ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் ஆற்று மணல் தோண்டி எடுக்கப்பட்டு, டிராக்டர் வாகனங்களில் தொடர்ந்து கொண்டு செல்லப்படுவதாகவும், இதனால் அப்பகுதியில் மிகப்பெரிய அளவில் பள்ளங்கள் உருவாகி வருவதாகவும் சமூக ஆர்வலர் எபினேசர் கூறியுள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும், மேட்டுப்பட்டி கிராமத்திற்கு அருகே உள்ள தனியார் வீட்டுமனை பகுதி வழியாக, சுமார் 30 அடி அகலத்திற்கு பிரத்யேகமாக பாதை அமைத்து, அதன் வழியாக கனரக வாகனங்கள் சென்று வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆற்று மணல் அள்ளப்படுவது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் புகார் அளித்த பொதுமக்களின் தொலைபேசி எண்கள் மற்றும் விவரங்கள் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக கூறப்படும் நபர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்களால் புகார்தாரர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகவும் எபினேசர் தெரிவித்துள்ளார்.

இதனால், மணல் கடத்தல் குறித்து அதிகாரிகளிடம் புகார் அளிக்க பொதுமக்கள் அச்சப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குடிநீர் பிரச்சனை மேலும் தீவிரமடையும் அபாயம் விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், வைப்பார் ஆற்றில் தற்போது போதிய நீர்வரத்து இல்லாத சூழ்நிலை காணப்படுகிறது.

இந்நிலையில், ஆற்றுப்படுகையில் அளவுக்கு அதிகமாகவும், ஆழமாகவும் மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், இதன் காரணமாக ஆற்றைச் சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கான நிலத்தடி நீர் கிடைப்பதில் எதிர்காலத்தில் மேலும் சிக்கல் ஏற்படக்கூடும் என்றும் சமூக ஆர்வலர் எபினேசர் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு இதுகுறித்து சமூக ஆர்வலர் எபினேசர் கூறுகையில்,

“மேட்டுப்பட்டி கிராமம் அருகே வைப்பார் ஆற்றுப்படுகையில் கடந்த மூன்று நாட்களாக இரவு முழுவதும் ஜே.சி.பி. இயந்திரங்கள் மற்றும் ஏராளமான டிராக்டர்கள் மூலம் மணல் அள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தகவல் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனியார் இடம் வழியாக சுமார் 30 அடி அகலத்திற்கு பாதை அமைத்து, அந்த வழியாக மணல் கடத்தல் நடைபெறுவதாக கூறப்படுகிறது. சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் 50 அடி ஆழம் வரை மணல் அள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆற்றுப்படுகையில் இதுபோன்று தொடர்ந்து மணல் அள்ளப்பட்டால், நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும். தற்போது குடிநீர் பிரச்சனையை சந்தித்து வரும் விளாத்திகுளம் பகுதியில், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால் அடுத்த ஆண்டுகளில் குடிநீர் பிரச்சனை மேலும் மோசமடையும் நிலை ஏற்படும். மணல் கடத்தல் குறித்து பொதுமக்கள் புகார் அளித்தால், அவர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் விவரங்கள் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக கூறப்படும் நபர்களுக்கு தெரிவிக்கப்பட்டு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அரசு அதிகாரிகள் சட்டவிரோத மணல் கடத்தலை தடுக்க வேண்டிய நிலையில், அவர்களது செயல்பாடுகள் மீது பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்படும் வகையில் இருப்பது கவலை அளிக்கிறது. இது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடும். எனவே, இந்த விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் உயர் அதிகாரிகள் உடனடியாக நேரடியாக ஆய்வு செய்து, உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும். சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டிருந்தால், அதில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மணல் கடத்தலுக்கு துணை போனதாக கூறப்படும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்த கோரிக்கை

மேட்டுப்பட்டி பகுதியில் நடைபெறுவதாக கூறப்படும் ஆற்று மணல் கடத்தல் குறித்து தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர் எபினேசர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், ஆற்று வளத்தை பாதுகாப்பதுடன், எதிர்காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டதாக உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts