போத்தனூரில் செயின் பறிப்பு மாணவன் கைது!!

கோவை மாவட்டம் போத்தனூர்.

முகமூடி அணிந்து வயதான பாட்டியிடம் தங்கச் செயின் பறிப்பு – கல்லூரி மாணவி மற்றும் மாணவன் கைது கோவை மாநகரம், போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளலூர் பகுதியில் வயதான பெண்ணிடம் முகமூடி அணிந்து தங்கச் செயின் பறித்த வழக்கில், கல்லூரி மாணவி மற்றும் கல்லூரி மாணவன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

30.08.2026 அன்று மாலை சுமார் 17.25 மணியளவில் சரஸ்வதி என்பவர் தனது உறவினர்களுடன் வெள்ளலூர் கறிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அருகில் வந்து, கிளினிக் எப்போது திறப்பார்கள் எனக் கேட்டுள்ளார். அதற்கு சரஸ்வதி, தினமும் மாலை சுமார் 17.00 மணிக்கு திறப்பார்கள் என்றும், அன்று இதுவரை திறக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, அந்நபர் மருத்துவரின் வீடு எங்குள்ளது எனக் கேட்டபோது, சரஸ்வதி தெற்கு திசையில் உள்ள மைதானம் சாலையை காண்பித்துள்ளார். அப்போது திடீரென அந்நபர் சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 4 பவுன் எடையுள்ள தங்கச் செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக ஓடிச் சென்றுள்ளார். இதனால் சரஸ்வதி கீழே விழுந்துள்ளார். அருகிலிருந்தவர்கள் அந்நபரை பிடிக்க முயற்சித்தும் அவர் தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து சரஸ்வதி அளித்த புகாரின் பேரில் போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படியும் துணை ஆணையர் தெற்கு அவர்களின் உத்தரவின்படியும் போத்தனூர் உதவி ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர் அசோக் குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சம்பவ இடம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள CCTV கேமரா பதிவுகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன. விசாரணையில், குற்றச் சம்பவத்திற்கு பயன்படுத்தியதாக தெரியவந்த TVS Jupiter இருசக்கர வாகனத்தின் பதிவு எண் TN 99 AD 4548 என்பதும் CCTV பதிவுகள் மூலம் கண்டறியப்பட்டது. மேலும், குற்றவாளிகள் சென்ற வழித்தடங்களில் உள்ள CCTV பதிவுகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, அவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.

விசாரணையில் சிந்து என்ற கல்லூரி மாணவியும், பரணிதரன் (21), S/o சிவகுமார், கல்லூரி மாணவனும் சேர்ந்து ஆடம்பரமாக வாழ்வதற்காகவும், பரணிதரனுக்கு இருந்த கடனை அடைப்பதற்காகவும் வயதான பெண்களிடம் நகைகளை பறிக்க திட்டமிட்டது தெரியவந்தது. அதன்படி, இருவரும் இணைந்து வெள்ளலூர் பகுதியில் வயதான பெண்களை நோட்டமிட்டு வந்துள்ளனர். சம்பவத்தன்று வெள்ளலூர் கறிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே அமர்ந்திருந்த சரஸ்வதியிடம் பரணிதரன் முகமூடி அணிந்து சென்று, எதார்த்தமாக பேச்சுக் கொடுத்து அவரது கவனத்தை திசைதிருப்பி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

CCTV பதிவுகளின் அடிப்படையில் சிந்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர் அளித்த தகவலின் பேரில், கே.ஜி. சாவடி அருகிலுள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த பரணிதரனை தனிப்படையினர் சென்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பறிக்கப்பட்ட சுமார் 4 பவுன் தங்கச் செயின் 2 செல் போன்கள் மற்றும் இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு துணை ஆணையாளர் அறிவுரை… பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும் மூன்றாவது கண் என அழைக்கப்படும் கேமராக்கள் வணிக வளங்கள் மற்றும் வீடுகளிலும் பொருத்த வேண்டும் என்றார். இதனால் குற்றச்சன்பங்கள் குறைவதற்கு வாய்ப்புள்ளதாக அவர் கூறினார் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

தலைமை நிருபர்,

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts