கந்தர்வக்கோட்டை கோட்டை ஒன்றியத்தில் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு தொடக்கம்!!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலாண்டு மட்டும் முதல் பருவ தேர்வு செப் 16ல் தொடங்கப்பட்டது. தேர்விற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி செய்திருந்தார். தேர்வு மைய கண்காணிப்பாளராக கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை, நிவின், செல்விஜாய், வெள்ளைச்சாமி, ஜெம்ம ராகினி சகாய கில்டா உள்ளிட்டோர் செயல்பட்டார்கள். காலாண்டு தேர்வு மற்றும் முதல் பருவ தேர்வு இன்று தொடங்கி 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


தேர்வு அட்டவணைக்களாக ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான செப் 16 தமிழ், செப் 17 ஆங்கிலம், செப் 21 கணிதம், செப்22 உடற்கல்வி, செப் 23 ஆறாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பிற்குஅறிவியல், ஏழாம் வகுப்பிற்கு சமூக அறிவியலும், செப் 24 ஆறாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு சமூக அறிவியலும், ஏழாம் வகுப்பிற்கு அறிவியலும், தொடக்கக் கல்வித் துறையில் நடைபெறுகிறது. இதேபோல ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தேர்வு இன்று தொடங்கி செப்டம்பர் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய தலைவரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரமத்துல்லா பேசும் பொழுது மாணவ, மாணவிகள் முதல் பருவம் மற்றும் காலாண்டு தேர்வை மிகச் சிறப்பாக எழுத வேண்டும் எனவும், தினந்தோறும் தேர்வுக்குரிய பாடப்பகுதியை படித்து தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். தேர்விற்கு ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு சரியான விடைகளை எழுத வேண்டுமென அறிவுரை வழங்கினார். இதேபோல பள்ளிக்கல்வித்துறையில் செப்டம்பர் 16 தொடங்கி செப்டம்பர் 25 வரை நடைபெறுகிறது. அதன் பிறகு காலாண்டு தேர்வுக்கான விடுமுறை அளிக்கப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக தலைமை நிருபர்

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts