பகுத்தறிவு சுடரொளி தந்தை பெரியார் அவர்களின் 148 வது பிறந்தநாள் விழா!!

தூத்துக்குடி வடகிழக்கு மாவட்டம் விளாத்திகுளம் ஒன்றியம் புதூரில் தமிழக வெற்றி கழகம் வடகிழக்கு மாவட்ட செயலாளர் மகேஸ்வரன் தலைமையில் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர்
செண்பக்கனி ஏற்பாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு நாகலாபுரம் சமத்துவபுரத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஒன்றியம் மற்றும் பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் v. கார்த்திகா MA M. Phil மாவட்ட இளம்பெண் பாசறை,
சார்பு அணி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பெரியார் பிறந்த நாள் விழாவினை மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *