ஸ்பார்க் 2026 – முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு வரவேற்பு விழா!!

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் கல்வி குழும வளாகத்தில், முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான “ஸ்பார்க் 2026” ஓரியண்டேஷன் மற்றும் ஃப்ரெஷர்ஸ் தின விழா நடைபெற்றது.

பார்க் கல்வி குழுமத்தின் மூன்று பொறியியல் கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு கட்டிடக்கலைக் கல்லூரியில் சேர்ந்துள்ள 1,243 முதலாம் ஆண்டு மாணவர்கள் விழாவில் பங்கேற்றனர்.

பிரேமா ரவி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழா, பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் ஆலன் ஜோஷ்வா மற்றும் கெவின் ஜோ இசையமைத்த செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட இறை வணக்கப் பாடலுடன் தொடங்கியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தொடர்ந்து, தலைமை விருந்தினர் ஈரோடு மகேஷ், பார்க் கல்வி குழும தலைவர் டாக்டர் பி.வி. ரவி, தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் அனுஷா ரவி உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர்.

விழாவில் பேசிய டாக்டர் அனுஷா ரவி, மாணவர்கள் ஒழுக்கம், கல்வி மற்றும் பணித்திறன்களை வளர்த்துக்கொண்டு பெற்றோர்களை பெருமைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் துறைகளில் உருவாகி வரும் வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

பார்க் கல்வி குழும தலைவர் டாக்டர் பி.வி. ரவி, மாணவர்கள் பெரிய கனவுகளைக் கண்டு, கல்வியை மதித்து தங்களது எதிர்காலத்திற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். செயற்கை நுண்ணறிவு யுகத்தில் படைப்பாற்றல், புதுமை மற்றும் தொடர்ச்சியான கற்றல் முக்கியம் என்றும் தெரிவித்தார்.

தலைமை விருந்தினர் ஈரோடு மகேஷ், மாணவர்கள் தன்னம்பிக்கை, ஒழுக்கம், சிக்கல் தீர்க்கும் திறன், தெளிவான சிந்தனை மற்றும் தகவல் தொடர்புத் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மற்றவர்களுடன் தங்களை ஒப்பிடாமல், தங்களது தனித்துவமான திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

விழாவில், மாணவர்கள் தங்களது எதிர்கால சுயத்திற்கு கடிதம் எழுதும் புதுமையான நிகழ்வும் நடைபெற்றது. இதில் முதலாம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப மாணவி ஶ்ரீ சரண்யா எழுதிய கவிதை பார்வையாளர்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.

மேலும், பார்க் கல்வி குழுமத்தில் சேர்ந்த முதல் 10 மாணவர்களுக்கு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்ட அவர்களது AI புகைப்படங்கள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.

பல்வேறு கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் நிர்வாகிகள் விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். பார்க் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் டாக்டர் குமரேசன் நன்றி தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *