கோவையில் ஜெனோரா வீட்டு உரிமையாளர்களுக்கு சாவி வழங்கும் நிகழ்வு!!

கோவையில் ஜெனோரா வீட்டு உரிமையாளர்களுக்கு சாவி வழங்கும் நிகழ்வு, தன்னம்பிக்கை பேச்சாளர்,பிரபல தொகுப்பாளர்,நீயா நானா கோபிநாத், ஈரோடு மகேஷ் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை கோல்ட்வின்ஸ் பகுதியில் ஜென்விஸ்டாஸ் ரியால்டி சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ஜெனோரா சொகுசு வில்லா குடியிருப்பின் வீட்டு உரிமையாளர்களுக்கு சாவி வழங்கும் நிகழ்வு, கோவை அவினாசி சாலையில் உள்ள மெர்லிஸ் நட்சத்திர ஓட்டல் அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஜெனோராவில் மொத்தம் 60 அதி நவீன சொகுசு வில்லாக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக வீடுகளைத் தேர்வு செய்த 30 குடும்பங்களுக்கு சாவிகள் வழங்கப்பட்டது
இதன் மூலம் தங்களது புதிய வீட்டை மட்டுமின்றி, எதிர்காலத்தில் அண்டை வீட்டாராக இருக்கப்போகும் குடும்பங்களையும் முன்கூட்டியே அறிமுகம் செய்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.

முன்னதாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஜென்விஸ்டாஸ் ரியால்டி தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஓம் பிரகாஷ் குணசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “வீட்டை ஒருமுறைதான் தேர்வு செய்கிறோம்; ஆனால் அண்டை வீட்டாருடன் ஒவ்வொரு நாளும் வாழ்கிறோம். எனவே, முதல் கிரகப்பிரவேசத்திற்கு முன்பாகவே எங்கள் குடும்பங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே எங்களது நோக்கம்” அவர்களுடன் ஒரு நட்புறவை ஏற்படுத்தவே இந்த விழா என்று தெரிவித்தார்.

தரமான கட்டிடங்களை கட்டி கொடுப்பதே எங்கள் நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக இருப்பதாக தெரிவித்த அவர், ஜெனோரா குடியிருப்பில் இதை முழுமையாக காண முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஒவ்வொரு வில்லாவிலும் தனி மின்தூக்கி உள்ளிட்ட நவீன வசதிகளுடன், சிறப்பு கட்டிடக்கலை மற்றும் உள் அலங்கார வசதிகளும் இடம்பெற்றுள்ளதாக கூறிய அவர், தரம் மட்டுமே ஜெனோராவின் தாரக மந்திரம என தெரிவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக கோபிநாத், மற்றும் ஈரோடு மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு, வீடு என்பது வெறும் கட்டிடம் மட்டுமல்ல; குடும்பத்தினர் மகிழ்ச்சியாக வாழ்வதுடன், நல்ல அண்டை உறவுகளை உருவாக்கும் இடமாகவும் இருக்க வேண்டும் என்பது குறித்து பேசினர்.

ஜென்விஸ்டாஸ் ரியால்டி நிறுவனத்தை தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த 17 முன்னணி ஜவுளி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ளன. மூன்று தசாப்தங்களுக்கும் மேலான தொழில் அனுபவம் கொண்ட இந்நிறுவனம், நிதி வலிமை மற்றும் தொழில் அனுபவத்தை ஒருங்கிணைத்து ஜெனோரா திட்டத்தை செயல்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

முதல் கட்டமாக 30 குடும்பங்களுக்கு சாவி வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 30 சொகுசு வில்லாக்கள் விற்பனைக்கு உள்ளதாக நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts