
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் பகுதிகளில் அமைந்துள்ள மிக முக்கியமான சுற்றுலா தளமாக கருதப்படும் கொழுக்குமலை என்ற இடத்தில் சுற்றுலா பயணிகள் ஜீப் சவாரி செய்வது வழக்கம். ஆனால் அங்கு செல்ல அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தற்பொழுது கொழுக்குமலை ஜீப் சவாரி வாகனம் ஓட்டுநர்கள் சில கோரிக்கைகளை வைத்து அக்டோபர் 11ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வைத்த கோரிக்கை அங்கு ஜீப் சவாரி செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு அடையாள அட்டை கொடுக்கப்பட வேண்டும், குறைந்தது இரண்டு தடவையாவது சென்று வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும், ஆன்லைன் வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும், சுற்றுலா பயணிகள் தங்களுடைய குறைகளை வாகன ஓட்டுனர்கள் பற்றிய குறைகளை கூறும் பொழுது வாகன ஓட்டுனரையும் சுற்றுலா பயணிகளையும் வைத்து இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொழுக்குமலையில் ஜீப் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளா அரசு இந்த கோரிக்கைகளை சரியான முறையில் ஆய்வு செய்து இதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்களின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணாறு.






