
கோவை: தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 50,000 சாவித் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் எனச் சாவித் தொழிலாளர்கள் நலச்சங்கம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் தொழிலாளர்களின் நலன், மருத்துவ முகாம், நிதிநிலை அறிக்கை, தொழில் மேம்பாடு மற்றும் பயிற்சித் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சாவித் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 10,000 பெண் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கவும், அவர்களுக்குத் தேவையான நலத்திட்டங்களைச் செயல்படுத்தவும் அரசிடம் வலியுறுத்தப்பட்டது.
மேலும், ஆன்லைன் விற்பனையில் சாவிகள் மற்றும் சென்சார் கருவிகள் தொடர்பான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை முறைப்படுத்தி, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு. ஆனந்தன், பொதுச் செயலாளர் ஆர்.எஸ். கௌசல், மாநிலத் துணைச் செயலாளர் செல்வபிரேம்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.






