
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள சோலையார் எஸ்டேட் சாலை வால்பாறை நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு ஒப்படைக்காத சாலையாக தெரிகிறது. பல நாட்களாக அப்பகுதியில் விபத்துக்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வால்பாறை 108 வாகனமும் அவசரத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். பலமுறை அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் இதர வாகனங்கள் பழுதாகி சாலையில் நின்று விடுகிறது. அப்பகுதியில் எந்த வாகனமும் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வாகன ஓட்டுனர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கூறியும் அந்த சாலையை இதுவரை வால்பாறை நகராட்சியிடமோ சாலை அமைப்பு அதிகாரியிடமோ சாலையை பழுது நீக்க முடியாமல் தவிக்கின்றனர்.
இதற்குக் காரணம் அந்த சாலையை எஸ்டேட் நிர்வாகம் யாருக்கும் தர மறுக்கிறது. இதனால் அந்த நிர்வாகம் வால்பாறை நகராட்சி மற்றும் சாலை அமைப்பு நெடுஞ்சாலை துறையினருக்கு ஒப்படைக்க வேண்டும் ஒப்படைத்தால் தான் அந்த சாலையை புதுப்பிக்க முடியும் அந்த நிர்வாகம் இதுவரை சாலை புதுப்பிக்காமல் தாமதம் ஆக்கிக் கொண்டே வருகிறது. அப்பகுதியில் அதிகளவில் விபத்துக்கள் நேர்ந்து கொண்டு உள்ளது இதனைக் கண்டாவது நடவடிக்கை எடுப்பார்களா என அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர் திவ்யக்குமார்











