வாகனங்களால் முற்றிலும் சேதம் அடைந்த சாலை நேரில் ஆய்வு செய்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன்!!

தூத்துக்குடி மாவட்டம் – விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி, புதூர் ஊராட்சி ஒன்றியம்,வீரப்பட்டி கிராம மக்கள் இன்றைய தினம் (23.11.2026) காலை *விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் சந்தித்து வீரப்பட்டி வழியாக அதிக பாரத்துடன் கற்களை ஏற்றி செல்லும் லாரியினால் முத்துலாபுரம் செல்லும் சாலை 5-கி.மீ தொலைவிற்கு சாலை சேதம் அடைந்துள்ளதாக புகார் அளித்து இன்றைய தினம் மாலை ஆய்வு செய்யுமாறு கோரிக்கை வைத்ததை தொடர்ந்து இன்றைய தினம் மாலை *விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் வீரப்பட்டி கிராமத்திற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது. *அந்த வழியாக உரிய அனுமதி இல்லாமல் அரசு அனுமதித்த எடையை விட அதிக எடையுடன் வந்த 10-க்கும் மேற்பட்ட லாரிகளை* சிறைப்பிடித்து *வட்டாட்சியரிடம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஒப்படைத்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் சேதமடைந்துள்ள சாலையில் இரு வழி சாலையாக மாற்றித் தரவும் நடவடிக்கை எடுப்பதாக கிராம மக்களிடம் உறுதி கூறினார்கள். ஆய்வின்போது எட்டயபுரம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அவர்கள் உதவி பொறியாளர் அவர்கள் எட்டையாபுரம் வட்டாட்சியர் அவர்கள் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts