விளாத்திகுளம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்:கல்லூரி மாணவர்கள் 2 பேர் காயம்; ஒருவரது நிலை கவலைக்கிடம்!!

விளாத்திகுளம், நவ.24-

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் காயமடைந்தனர். இதில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குரளையம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் முகேஷ் குமார் (19), சூரங்குடி அருகே நெடுங்குளத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் முனீஸ் கண்ணன் (19) ஆகிய இருவரும் நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

இவர்கள் கல்லூரி முடிந்து டி.எண் 96.எம்.7720 பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிளில் விளாத்திகுளம்- மதுரை சாலையில் பெருநாழி விளக்கு அருகே சென்றுகொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். முகேஷ் குமாருக்கு நெற்றி, கன்னம், கை மற்றும் தலையின் பல்வேறு பகுதிகளில் படு காயங்கள் ஏற்பட்டன. முனீஸ் கண்ணனுக்கு தாடை, புருவம் மற்றும் கால் பெருவிரலில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, இந்த விபத்தில் காயம் அடைந்த இருவரையும் அப்பகுதியினர் மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய திருப்பூர் காங்கேயம் ரோடு ஆர்.வி.இ நகரை சேர்ந்த அங்குராஜ் என்பவரது மகன் முருகேசன் வயது (49). என்பவரை கைது செய்து இந்த விபத்துக்கான காரணம் குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts