கோவை மாவட்டம் பொள்ளாச்சி சி டி சி காலனி பகுதியிலுள்ள பெரியார் காலனிக்கு செல்லும் சாலையில் கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குழி தோண்டப்பட்டது.
சுமார் 3 அடி ஆழத்துக்கு தோண்டப்பட்டு குழியை சரி செய்து மூடாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில் குழி மூடாமல் இருப்பதால் இவ் வழித்தடத்தில் பயணிப்போர் அச்சத்துடன் கடக்கின்றனர். மேலும் புதிதாக வருபவர்களுக்கு குழி இருப்பதே தெரியாமல் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு காயங்களுடன் கடந்து செல்கின்றனர்.
இது குறித்து தமிழக முதலமைச்சரின் உதவி மையம் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அனுப்பியும் பயன் இல்லை என்கின்றனர் இப்பகுதியிலுள்ள சமூக ஆர்வலர்கள்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழியை மூட கால தாமதம் செய்யாமல் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் சார்பாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.