கோவை மாவட்டம். தமிழகத்தில் திமுகவின் ஆட்சி சிறந்து விளங்கும் நிலையில் தமிழகத்தில் திமுகவில் உறுப்பினர்கள் இணைந்து வருவதை ஆங்காங்கே பார்த்து வருகிறோம் அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் போத்தனூர் குறிச்சி 99 வது வார்டில் வசிக்கும் சமூக ஆர்வலரான A.S. சாதிக் நேற்றைய தினம் 99 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாஷா முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
மேலும் A.S. சாதிக் கூறுகையில்:
மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களுக்கு மிக சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறார் இது என் மனதை மிகவும் கவர்ந்து உள்ளதாகவும் சிறுவயதிலிருந்தே சமூகத்தின் மீது அக்கறை கொண்டுள்ள நான். மக்களுக்கு நற்பணிகளை செய்ய முயற்சித்துள்ளேன் தன்னை திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக் கொண்டதால் மக்களுக்கு நற்பணிகளை செய்ய நல்ல வழிவகை உண்டு என்றும் கூறுகிறார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த வட்டச் செயலாளர் முகமது ஜின்னா, மூத்த கழக உறுப்பினர். இரும்பு கடை பீர்முகமது,
ஏ எஸ் சுலைமான், செய்யது காதர், அசார், ஷாஜகான், அக்பர், அஷ்ரப், மற்றும் நண்பர்கள் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்
கொண்டது மனமகிழ்ச்சி கொள்வதாக கூறுகிறார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
–காதர் குறிச்சி. ராஜேந்திரன்.