திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தளியில் மேசன் வேலை செய்து வந்த 48 வயதுடைய தர்மராஜ் தனது சொந்த ஊரான கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள காளியா புரத்திற்கு சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளார். ஏற்கனவே இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டிற்கு பணம் கொடுக்காமல் குடித்து செலவழித்து வந்ததாக தெரிகிறது. மேலும் இவர் குடி போதைக்கு அடிமையானதால் மன விருத்தியில் இருந்ததாக தெரிகிறது
இந்த நிலையில் நேற்று இரவு காளியாபுரம் சுடுகாட்டிலுள்ள மரத்தில் அவர் அணிந்திருந்த வேட்டியால் குடிபோதையில் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இத்தகவலை அறிந்த ஆனைமலை காவல் நிலைய போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து.தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஏப்ரல் 25ஆம் தேதி திங்கட்கிழமை வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு ஆனைமலை தமுமுக ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஆனைமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை..
One Response
அருமையான பதிவு