கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சூலக்கல்லில் அமைந்துள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்குள்ள அம்மனை வழிபட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல் வாரத்தில் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாக திருவிழா நடைபெறவில்லை இந்நிலையில் இந்தாண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 18ஆம் தேதி தொடங்கி நாள்தோறும் கிராம மக்கள் பூச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் வழிபட்டு வந்தனர்.
பொள்ளாச்சி பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா ஆர்வத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்! மூன்று நாட்கள் நடக்கும் தேர் திருவிழாவில் முதல் நாளான நேற்று அலங்கரிக்கப்பட்ட தேரில் சிவப்பு பட்டு உடுத்தி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதையடுத்து தேர் வலம் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 15 நாட்களாக விரதமிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். வீதிகளில் அசைந்தாடி வந்த தேர் மீது பக்தர்கள் வாழைப்பழம் வீசி பயபக்தியுடன் வழிபட்டனர். முதல்நாள் வலம் வந்த தேர் கிராமத்தின் கிழக்கு எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டது. இது தொடர்ந்து இன்றும் மற்றும் நாளையும் தொடர்ந்து தேர் திருவீதி உலா வரும்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.