கோவை ஆவாரம்பாளையம் ஸ்ரீவல்லி நகர் பகுதியை சேர்ந்தவர் சிபி சுப்பிரமணியம் இவருக்கு திருமணமாக வில்லை இவரது தாயார் வசந்தா மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் சிபி சுப்பிரமணியம் தாயாரை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டின் கதவு சில நாட்களாக திறக்கப்படாமல் இருந்ததுடன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தபோது சிபி சுப்பிரமணியம் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி பிணமாக இருந்துள்ளார் மேலும் மனநிலை பாதிக்கப்பட்ட வசந்தா மயங்கிய நிலையில் இருந்துள்ளனர்.
இதனை அடுத்து மூதாட்டியை மீட்டு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்த காவல்துறையினர் சிபி சுப்பிரமணியம் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட மகன் பிணத்துடன் மூதாட்டி மூன்று நாட்கள் இருந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியதோடு பரபரப்பையும் ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.