தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அண்ணாசாலை இசக்கிமுத்து மகன் ராஜசூர்யா (22). இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். ஆடி கொடை விழாவிற்கு சென்னையிலிருந்து குலசேகரன்பட்டினம் வந்த ராஜசூர்யா தனது பாட்டி வீட்டில் தங்கியுள்ளார். கடந்த 4-ஆம் தேதி குடிபோதையில் இருந்த ராஜசூர்யா வீட்டிலிருந்த அதிகளவில் மாத்திரைகளை சாப்பிட்டு மயக்கமடைந்தார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உடனடியாக அவரை உடன்குடி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.