கேரளா மாநிலம் இடுக்கி மாவடத்திலுள்ள கட்டப்பணையிலுள்ள வில்லிலாங்கண்டம் என்ற இடத்தில் ராஜேஷ் – ஶ்ரீ குட்டி அவர்களின் மகள் ரித்திகா.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நேற்று காலை வீட்டின் முன்னால் விளையாடி கொண்டிருக்க அப்பா ராஜேஷ் தனது ஆட்டோவை ஸ்டார்ட் செய்து திருப்பிய போது அப்பாவை பார்த்த இரண்டரை வயது சிறுமி ரித்திகா ஆட்டோவை நோக்கி வந்துள்ளார். ஆட்டோவின் பின்னால் குழந்தை நிற்பதை அறியாமல் ராஜேஷ் ஆட்டோவை திருப்பியதால் பின் சக்கரம் குழந்தையின் மேல் ஏறியது.
குழந்தையின் சத்தம் கேட்டு ஆட்டோவை நிறுத்தி விட்டு காயம்பட்ட குழந்தையை மீட்டு உடனடியாக காரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். செல்லும் வழியில் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றத்தில் காரை இயக்கியதால் கார் எதிரே வந்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தாமதம் ஆனதால் குழந்தையை காப்பற்ற முடியவில்லை. குழந்தை ரித்திகா பரிதாபமாக மரணமடைந்தார். இந்த சம்பவம் அந்த குடும்பத்தில் பெரும் இழப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.