தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள தெற்கு வாழவல்லான் கிராமத்தைச் சேர்ந்தவர் பட்டு மகன் சுப்பிரமணியன் (35), இவரது வீட்டில் இரண்டாவது மாடி கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நேற்று கட்டிடப் பணிகளை பார்வையிடச் சென்றபோது எதிர்பாராத விதமாக அவரது கை மின் வயரில் பட்டு தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.