தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள சமையலர் மற்றும் சலவையாளர் பணியிடங்களுக்கு பெண்களிடமிருந்து தனித்தனியே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இனசுழற்சி முறை: I – சமையலர் – காலிப்பணியிடங்கள் – 1 ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) முன்னுரிமை பெற்றவர் SC(A) Priority – (Women/ Destitute Widow) – 1 Post.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இனசுழற்சி முறை: II – சலவையாளர் – காலிப்பணியிடங்கள் – 1 ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) முன்னுரிமை பெற்றவர் SC(A) – Priority – (Women /Destitute Widow) – 1 Post இரு பதவிகளுக்கும் ஊதிய விகிதம் நிலை 1 ரூ.15700 – 58100, கல்வித்தகுதி : தமிழில் எழுதபடிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு:01.01.2022 அன்று SC/ST – 18- 37, MBC/BC – 18 – 34, 0C – 18 -32 மாற்றுத்திறனாளி – 42.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: முதல்வர், அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தூத்துக்குடி. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 31/08/2022 மாலை 5 மணி வரை. (விண்ணப்பம், கல்வித்தகுதி, சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றை நகலாக இணைக்க வேண்டும். தேவையான சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்) முன்னுரிமை பெற்றவர்கள் உரிய சான்றிதழ் இணைக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட 31/08/2022 பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வர் (மு.கூ.பொ.) மரு.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.