தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 25ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் “2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்கான ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” 25. 08. 2022 அன்று காலை 11. 00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் “முத்து அரங்கத்தில்” வைத்து நடைபெற உள்ளது.
எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிய பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு செய்திக் குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.