பெண்ணிடம் 5 பவுன் தங்கநகை பறிப்பு! காவல்துறையினர் தீவிர விசாரணை!!

கோவை சாய்பாபாகாலனி அடுத்துள்ள பி.என்.புதூர் சுந்தரம் 4-வது வீதியை சேர்ந்தவர் பெரியசாமி.

இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது22). சம்பவதன்று இவர் வீட்டின் அருகிலுள்ள கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வீட்டிற்கு நடந்து வந்து கொண்டு இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென வெள்ளையம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுகுறித்து வெள்ளையம்மாள் சாய்பாபகாலனி போலீசில் புகார் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ரெஜினா வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்து, விசாரணை நடத்தி வருகிறார்.

இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-அருண்குமார், கிணத்துக்கிடவு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp