தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பள்ளி செல்லும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 4 குழந்தைகளின் தந்தையை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கீழபாண்டவர்மங்கலத்தினை சேர்ந்தவர் மகேந்திரன் (42). இவர் அங்குள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளன.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் அதே பகுதியில் உள்ள 11-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு மகேந்திரன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் மாணவிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தபோது அந்த மாணவி 6 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்து சிறுமி குடும்பம் விசாரித்தபோது, பள்ளி மாணவிக்கு மகேந்திரன் 2 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த மாணவியின் பெற்றோர் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதையெடுத்து போலீசார் மகேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.