வேலூர் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) ஞானவேல் தலைமையில், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் வேலூர் நேதாஜி மார்க்கெட், மீன் மார்க்கெட், மெயின் பஜார், மாங்காய் மண்டி, கோனவட்டம், மேல் மணவூர் மற்றும் ராணிப்பேட்டை பகுதிகளில் உள்ள காய்கறி, பூ, பழக் கடைகள் மற்றும் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009 சட்டத்தின் கீழ் கூட்டாய்வு மேற்கொண்டனர்.
இதில் மின்னணு தராசுகள் 22, மேஜை தராசுகள் 11,எடைக்கற்கள் 52,மேடை தராசு 2, விட்ட தராசுகள் 3 என மொத்தம் 120 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 14 வியாபாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில்
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுபோன்ற திகில் ஆய்வுகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் என மேற்குறிப்பிட்ட இடங்களில் வணிகர்கள் பயன்படுத்தும் தராசுகளை உரிய காலத்துக்குள் மறு முத்திரையிடவும் மறு முத்திரை சான்று தெரியும்படி கடைகளில் வைத்திருக்க வேண்டும். மேலும் சான்று இல்லை எனில் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என தொழிலாளர்கள் உதவி கமிஷனர் ஞானவேல் தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-P. இரமேஷ், வேலூர்.