கோவை:
இன்று (25-09-2022) நடைபெற்ற நிகழ்ச்சியில் YMJ மாநில துணை பொது செயளாளர் P.M.அல்தாஃபி கலந்துகொண்டு சிறப்புப்பேட்டி உரை நிகழ்த்தினார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அவர்அளித்த பேட்டியில் கூறியதாவது:
“கோவை மற்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு நல்லிணக்கத்தோடு வாழும் சமுதாய மக்கள் மத்தியில் பிலவை ஏற்படுத்த கலவரங்கள் உருவாக்க ஒரு சிலர் முயற்சிக்கிறார்கள்.
இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட வேண்டும்” என்றார். “கோவையில் குறிப்பாக மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள்.
இது தமக்கு வேதனை அளிக்கிறது. காவல்துறை இந்த மாணவர்கள் பிரச்சனையை கையில் எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு போதை பொருளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சிறைவாசிகள் நன்னடத்தை காரணமாக ஒவ்வொரு ஆணடும் விடுதலை செய்து வருகின்றனர். ஆனால் முஸ்லிம் சிறைவாசிகள் மடடும் புரக்கனிக்கபட்டு வருகிறாரகள்.
இதனை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் சென்ற தேர்தலில் சிறைவாசிகள் குறித்து வாக்குறுதி அளித்தாரகள் அதை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார். இந்த நிகழ்ச்சியில் YMJ கோவை மாவட்ட தலைவர் சமீர், செயளாளர் காஜா, பொருளாளர் ஹபீபுல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-சையது காதர், குறிச்சி.