ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை (‘டி-20’) கிரிக்கெட்தொடரின்15வது சீசன்நடக்கிறது. இன்று துபாயில் நடக்கும் ‘சூப்பர்-4’ சுற்று போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இதற்கு முன்பு நடந்த லீக் சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
2-வது முறையாக மோதுவதால் பாகிஸ்தான் அணியானது லீக் சுற்றில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுப்பதில் தீவிரம் காட்டக்கூடும். எனவே இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை நடந்த ஆசிய கோப்பை வரலாற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 15 முறை மோதின. இதில் இந்தியா 9, பாகிஸ்தான் 5ல் வென்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-அருண்குமார், கிணத்துக்கடவு.