கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் உள்ள பாஜக மாவட்டச் செயலாளர் பொன்ராஜ், நிர்வாகி சிவா, இந்து முன்னணியை சேர்ந்த சரவணன் ஆகியோர் வீடுகளில் பெட்ரோல் குண்டு மர்ம நபர்களால் வீசப்பட்டுள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் 2 கார்கள், 2 ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்துள்ளனர்.
மேலும் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் தீபா சுஜிதா தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் இச்சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.