பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோவையை சேர்ந்த
11வயதான பள்ளி மாணவி 2கிலோ மீட்டர் தூரம் வரை கால் பிளவு முறையில் சிலம்பம் சுற்றி சாதனையை நிகழ்த்தியுள்ளார். கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணியம், சத்யபிரியா தம்பதியினரின் மகள் மெளனிகா, 11வயதான பள்ளி மாணவி அதே பகுதியில் உள்ள முல்லை தற்காப்பு பயிற்சி மையத்தில் சிலம்பம் உள்ளிட்ட கலையை கற்று வந்துள்ளார்.
இந்நிலையில் மாணவி மெளனிகா சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டும்,பெண் குழந்தைகள் அனைவரும் தற்காப்பு கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற, Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQஅவசியத்தை வலியுறுத்தியும், கால் பிளவு முறையில் ஒரு கைகளில் சிலம்பம் சுற்றியபடி, 2 கிலோ மீட்டர் தூரத்தை, இரண்டு மணி நேரம், 8 நிமிடங்களில் செய்து சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
பள்ளி மாணவியின் இந்த சாதனை இந்திய நாட்டில் யாரும் இதுவரை செய்யாத புதிய உலக சாதனையாக படைத்துள்ளார்.இதனை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகரித்து,சான்றிதழ்களும், பதக்கங்களையும் வழங்கி பாராட்டுகள் தெரிவித்து கவுரவித்தது.
-சீனி,போத்தனூர்.