மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜோசியர் மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயற்சி! தூத்துக்குடியில் பரபரப்பை!!

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள சூழவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் மாரியப்பன் (40). ஜோசியரான இவர் தனது உறவினருக்காக நெல்லையைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.15லட்சம் கடன் வாங்கினாராம். இதில் ரூ.13 லட்சம் வரை திருப்பி செலுத்திய நிலையில் வட்டியுடன் சேர்ந்து மேலும் ரூ.25லட்சம் தருமாறு கத்துவட்டிக் கேட்டு அந்த நபர் மிரட்டினாராம்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுகுறித்து ஏரல் காவல் நிலையத்தில் மாரியப்பன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்நிலையில் மாரியப்பன் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

அப்போது திடீரென அவர் தன் மீதும், மனைவி, குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றினார். இதனைப் பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp