கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோவை சாலையில் அசோக் ஹோட்டல் எதிரில் செயல்படும்
பதிவுத் துறை அலுவலகத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இந்த அலுவலக கட்டிட இருபுறமும் புதர் மண்டி சுகாதாரமின்றி பாழடைந்த கட்டிடம் போல் காட்சி அளிக்கிறது.
மேலும் இந்தப் பகுதியில் விஷ ஜந்துக்கள் இருக்கக்கூடும் என்பதால் இங்கு வரும் மக்கள் மிகுந்த அச்சத்துடனே வந்து செல்கிறார்கள்.
இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியை கண்காணித்து சீரமைக்க வேண்டும் என இங்கு வரும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-M.சுரேஷ்குமார்.