கேரளா மாநிலம் பத்தனம் திட்டாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் புதன்கிழமை நடை திறக்கப்பட்டது. பொதுவாகவே நவம்பர் முதல் ஜனவரி வரை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பல லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம் இந்தியாவில் மட்டுமல்லாது பலர் வெளிநாடுகளில் இருந்தும் இந்த மாதங்களில் பல சிறப்பு பூஜை செய்ய கடந்து வருவது வழக்கம்.
ஆனால் கொரோனாவின் தாக்கத்தால் இரண்டு மூன்று வருடங்கள் மக்கள் தங்களுக்கு ஏற்ற நேரத்தில் சரியாக சென்று வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டது தற்பொழுது கொரோனா சூழ்நிலை குறைந்த நிலையில் திரளான மக்கள் வந்து செல்லுகின்றனர். கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையைக் கூட பொருட்படுத்தாமல் திரளான மக்கள் கோவிலுக்கு வர துவங்கியுள்ளனர் மற்றும் கோவிலுக்கு வந்து செல்பவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஐயப்பன் கோவில் தேவஸ்தானம் மற்றும் கேரள அரசு மூலமாக சிறப்பாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காலை முதல் மதியம் ஒரு மணி வரைக்கும் பின்னர் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரைக்கும் பக்தர்கள் கோவில் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன். மூணார்.