சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம்,
எஸ்.புதூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 9 வயது மாணவி. இவர் தொடக்கப்பள்ளி ஒன்றில் 4ஆம் வகுப்பு படித்து வந்தார். மேலும், அதே கிராமத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய மாணவன் ஒருவன் அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
சம்பவத்தன்று காலை, இயற்கை அழைப்பிற்காக அருகில் உள்ள ஊரணிக்குச் சென்ற மாணவிக்கு, அந்த 16 வயது மாணவன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி, தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ அதனைத் தொடர்ந்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவியை அவரது பெற்றோர் அருகில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். மேலும் நடந்த சம்பவம் குறித்து புழுதிபட்டி காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகாரளித்தனர். வழக்குப்பதிந்து தீவிர விசாரணை செய்த புழுதிபட்டி காவல்துறையினர், சம்பந்தப்பட்ட 11ஆம் வகுப்பு மாணவனை கைது செய்து, மதுரையில் உள்ள சிறுவர்கள் காப்பகத்தில் அடைத்தனர்.
– பாரூக், சிவகங்கை.